Thursday, June 13, 2013

எனக்குள் சங்கமிக்கிறாய்....!!









உன் வெட்க
அணை உடைந்து
பெரு வெள்ளமாய்
என்னுள் படர்ந்து பாய்கிறாய்..
நிற்காமல் வேகமாய்
என்னுள் இயங்கி
பேரானந்தக் கடலில்
எனக்குள் சங்கமிக்கிறாய்....!!

# கருங்குளம் மா.முருகன்

உயிர் வதைக்கும் சாதி....

 



இதயங்கள் ஒன்றாகின
உணர்வுகள் ஒன்றாகின
உயிர்களும் ஒன்றாகின
சாதி இரண்டாக்கியது
கண்களும் வற்றிப் போக
காதல் வாழ்ந்தது...
காதலர்கள் வீழ்ந்தார்கள்....!!

# கருங்குளம் மா.முருகன்

காதல் மலர்ந்தது

 






கண்கள் கலந்தன
காதல் மலர்ந்தது
உயிர்கள் கலந்தன
மோட்சம் எய்தின..!!

# கருங்குளம் மா.முருகன்

அடைமழை








பூமித்தாயை பிரிந்து
சூரியக் காதலனொடு
சென்ற நீர்மகள் மீண்டும்
பூமித் தாயை கண்டு மடி புரண்டிட
பெரும் வேட்கையோடு
வருகிறாள் அடைமழையாக....!!

# கருங்குளம் மாமுருகன்

நான் என்பதன் மூலம் நீ









நான் என்பதன் மூலம் நீயென்ப துணர்ந்தேன்
காண்போனும் காட்சியும் நீயன்றி வேறில்லை
மெய்யகச் சிறைகளில் உழன்றவை தாமெனும்
பொய்த் தளையறுத்தே பூரணமாய் மெய்யறிவே
செய்தவம்கூடி செம்மையா யெங்கும் துலங்கிடாயோ


# கருங்குளம் மாமுருகன்

காமப் புழுதி

 




காமப் புழுதியில் புரண்ட மனதிற்கு
வியர்வை பன்னீராய் மதி மயக்கும்
அழுக்கு தேகமும் வழுக்கும் மெழுகு
சிற்பமாய் இழுக்கென மறந்து இழுக்கும்
அற்ப சுகத்தில் தன்னை இழப்போர்
சொற்ப மானமும் நற்பேரும் இழப்பர்

# கருங்குளம் மாமுருகன்


மனதில் உறுதி வேண்டும்








எது வேண்டு மென்பதில் தெளிவோ டிருந்தால்
வேண்டியதை முயற்சியால் வென்று விடலாம்
இதுவா அதுவா தெளிவின்றி குழம்பித் திரிந்தால்
எதுவுமே கிட்டாமல் எமாந்தும் போகலாம்
இலக்கில்லா பயணம் ஊர் போய்ச் சேராது

# கருங்குளம் மாமுருகன்