இயற்கையின் அமைப்பே வேற்றுமைகள் நிறைந்தது. சத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணத்தின் அடிப்படையில் மனிதனை ஒரு நிலையிலிருந்து உயர்ந்த இன்னொரு நிலைக்கு உயர்த்தும் நோக்கில் அமைந்த பண்டைய சமூக அமைப்பு முறை படிப்படியாக பிறப்பின் அடிப்படையில் தொழிலின் அடிப்படையில் பல்கிப் பெருகி தனிப்பட்ட பழக்க வழக்கங்களுடனும் கூடிய சமூக அமைப்பாக மாறியுள்ளது. அனைத்து வேற்றுமைகளையும் ஒன்றுபடுத்தக் கூடிய அன்பை வளர்ப்பது ஒன்றே வேற்றுமையில் ஒற்றுமை காண வழிவகுக்கும். ஒழிய வேண்டியது சாதிகள் அல்ல. சாதி வெறி. சாதியை ஒழித்து விடுவோம் என மார்தட்டிக் கிளம்பிய திராவிட இயக்கம் அன்பின் அடிப்படையில் அல்லாமல் வெறுப்பின் அடிப்படையில் இயங்கியதால் சாதியை ஒழிப்பதில் வெற்றி காணாமல் அதன் வழித்தோன்றல்கள் சாதீய வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அவல நிலைக்கு பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. எல்லையில்லாத அன்பில் எல்லாப் பிணக்குகளையும் கரைப்போம். மனித நேயத்தையும் கடந்த ஆன்ம நேயத்தை வளர்ப்போம். புதிய பாரதம் படைப்போம்.
No comments:
Post a Comment