Tuesday, February 12, 2013


மேற்கத்திய பொருள்முதல் வாத நுகர்வுக் கலாச்சாரம் பெண்ணைப் போகப் பொருளாக நுகர்வுப் பண்டமாகவே சித்தரிக்கிறது. விளம்பரங்களில் பெண்கள் வளைவு நெளிவு கொண்ட உடலாகவே காட்டப் படுகிறார்கள். எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்ற அற வாழ்வியல் மெல்ல மெல்ல மறைந்து மிதமிஞ்சிய புலன் நுகர்வை ஊக்குவிக்கும் அறம் சாரா பொருள்முதல்வாதப் பொருளாதாரக் கொள்கைகள் கோலோச்சும் இந்த காலக்கட்டத்தில்  கல்வி, பொருளாதாரம் முதலான அனைத்துத் துறைகளிலும் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் மாற்று அமைப்பு ஏற்படாதவரை தொலை நோக்கில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்தங்கியே இருப்போம்.

No comments:

Post a Comment