Tuesday, February 5, 2013

விழிவழி
நுழைந்து
இதயம்
நிறைந்து
என்னை
முழுமையாக
ஆக்ரமித்து
என்
உயிர்க்
கடலில்
கடைந்
தெடுத்த
காதல்
அமிழ்தை
இருவரும்
உண்டதில்
மரணத்தை
வென்றோம்
முடிவென்ப
தேயில்லா
இத் தீரா
இன்பக்
காதல்
நிலைதான்
வீடுபேறென்பதா...?

No comments:

Post a Comment